नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय ॥ १ ॥
ಸರ್ಪರಾಜನನ್ನು ಹಾರವಾಗಿ ಧರಿಸಿರುವ, ವಿರೂಪಾಕ್ಷನಾದ, ಭಸ್ಮವನ್ನು ಲೇಪಿಸಿಕೊಂಡಿರುವ, ಮಹೇಶ್ವರನೆನಿಸಿದ. ನಿತ್ಯಶುದ್ಧನೂ, ದಿಗಂಬರನೂ, 'ನ' ಕಾರ ರೂಪನೂ ಆದ ಆ ಶಿವನಿಗೆ ನಮಸ್ಕಾರವು.
Obeisance unto all-mighty, eternal and ever-pure Lord Shiva with fierce eyes, who wears the King of Serpents as His garland, who has smeared his body with sacred ash, whose garment is the ethereal space and who is the form of the syllable 'Na' (न).
நம: ஶிவாய என்பது சிவ பஞ்சாக்ஷரம் இதன் முதல் எழுத்து ந என்பது. இந்தத் துதி ந என்ற முதல் எழுத்தில் துவக்கப்படுகின்றது. சிவபெருமான் ஸர்ப்பங்களை ஆபரணமாக உடையவன். மூன்று கண்களை உடையவன் விபூதி தான் அவனுக்கு உடலில் பூசிக்கொள்ளும் சிறந்த வாசனைப் பொடி. அவனே தேவர்களுள் சிறந்து விளங்குகின்றவன். என்றும் அழிவில்லாமல் இருப்பவன். கலங்கமற்றவன். திசைகளையே தனது ஆடையாகக் கொண்டவன். பிக்ஷாடன அவஸரத்தில் ஆடையில்லாத கோலம் கொண்டவன். ந என்ற அக்ஷர ரூபமாகத் தோன்றுபவன் ஐந்து எழுத்துக்கள் கொண்ட மந்திரம் சிவ தத்வத்தை விளக்குகிறது இதுமட்டும் அல்ல இதிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் சிவனைக் குறிக்கிறது. மேலும் மந்திரத்தை தேவதையின் சரீரமாகக் கூறியிருப்பதால் இம்மந்திரத்திலுள்ள ஒவ்வொரு அக்ஷரமும் சிவனுடைய ஸ்வரூபம்தான். ஆகவே 'ந' என்ற முதல் அக்ஷர ஸ்வரூபமாயும் அதன் பொருளாயும் சிவன் விளங்குகிறார். இங்கு உள்ளது போல் லலிதாத்ரிசதி யிலும் 'ககாரரூபா' 'ஏகாரரூபா' என்று இருப்பதைக் காணலாம். அவனை நாம் என்றும் வணங்குவோமாக இங்கு சிவபெருமானுடைய தோற்றம் நன்கு வர்ணிக்கப் பட்டுள்ளது. உலகில் அசுபமாக விளங்கும் சாம்பல் ஸர்ப்பம் முதலியவற்றையெல்லாம் தானே எடுத்துக்கொண்டு அவர் உலகுக்கெல்லாம் நன்மையைத் தருகின்றார். உலகிலுள்ள சிறந்தபொருள் ஒன்றையும் அவர் எடுத்துக் கொள்ளாதது இவைகளில்லாமலேயே அவர் பூர்ண திருப்தியுடன் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது மூன்று கண்களுடன் காணப்படும் அப்பெருமான் பார்ப்பவர்களின் உள்ளங்களில் பயத்தை உண்டுபண்ணினும் மங்கள விக்ரஹத்தை உடையவராகவே இருக்கின்றார். சாம்பலைப் பூசிக்கொண்டிருப்பினும் பரிசுத்தமானவர். உடுக்க ஆடை கூட இல்லாமலிருந்தும் அவர் மஹேசுவரர் எல்லா ஐசுவர்யங்களும் உள்ளவர். ந என்ற அக்ஷரம் உண்மையாகவே அவருடைய ஸ்வரூபத்தை எடுத்துக் காட்டு கின்றது. ந என்பதற்கு இல்லை என்று பொருள். சிவபெரு மான் அகிஞ்சனர். அதாவது அவரிடம் ஒன்றுமே கிடையாது. இதை दिगम्बराय சொல் காட்டுகின்றது. மேலும் ஈசுவரனுடைய ஸ்வரூபத்தை விளக்க இயலாத வேதங்கள் அவரைப்பற்றி नेति नेति என்றே கூறுகின்றன. அவர் நித்யர். இவ்வாறாக ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள குணங்கள் பரமேச்வரன் ஒருவனுக்கே பொருந்தும்
నాగేంద్రుని హారముగా ధరించినవాడు (సంసారమనే సర్పముయొక్క విషము అంటని వాడు) మూడు నేత్రము కలవాడు (కామాన్ని భస్మం చేయువాడు), భస్మము ఒంటినిండా పూసుకున్నవాడు (సంపూర్ణ వైరాగ్యభావము గలవాడు) అనగా మాయకు అతీతుడు. మహేశ్వరుడు అనగా సర్వజ్ఞుడు. నిత్యమైనవాడు, పరిశుద్ధుడు, దిగంబరుడు అనగా సర్వదిక్కులకు వ్యాపించినవాడు. న అక్షరస్వరూపుడు (ఏ ఆకారమునకు పరిమితి కానివాడు) అయిన శివునకు నేను నమస్కరిస్తున్నాను.
मन्दारमुख्यबहुपुष्पसुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय ॥ २॥
ಮಂದಾಕಿನಿನದೀ ಜಲವೆಂಬ ಚಂದನವನ್ನು ಲೇಪಿಸಿಕೊಂಡಿರುವ, ನಂದೀಶ್ವರನೇ ಮೊದಲಾದ ಪ್ರಮಥಶ್ರೇಷ್ಠರಿಗೆ ಒಡೆಯನಾದ, ಮಂದಾರವೇ ಮೊ ದ ಲಾ ದ ನಾನಾ ಪುಷ್ಪಗಳಿಂದ ಪೂಜಿತನಾದ, ಪವಿತ್ರ 'ಮ' ಸ್ವ ರೂಪನಾದ ಆ ಶಿವನಿಗೆ ನಮಸ್ಕಾರವು.
Prostration unto Shiva, the master of the foremost of Pramathas such as Nandi, for whom the water of Mandakini is sandal paste, who is worshipped with mandara and various other flowers and who is glorified by the syllable 'Ma' (म).
பஞ்சாக்ஷர மந்திரத்தின் இரண்டாவது அக்ஷரம் 'ம ' என்பது . ஆதலால் இந்த இரண்டாவது சுலோகம் ம என்ற எழுத்தில் துவக்கப்படுகின்றது. சிவ பெருமான் தன்னுடைய சடையில் கங்கையைத் தரித்துக் கொண்டிருக்கின்றார் . அதனால் அவருக்கு கங்காதரன் என்ற பெயர் வழங்கலாயிற்று . இக் கங்கையின் நீர் சந்தனப் பூச்சுப் போல் அப்பெருமானுடைய உடலைக் குளிர்ச் செய்து கொண்டிருக்கின்றது . அவரைச் சுற்றிலும் நந்தி , பிருங்கி முதலிய கணநாதர்கள் குழுமி நிற்கின்றனர் . அவர்கள் அனைவருக்கும் அவரே தலைவன். அவர்கள் அனைவரும் மந்தாரம் பாரிஜாதம் முதலிய தேவதருக்களின் மலர்களால் அவரைப் பூஜிக்கின்றனர் . இவ்வாறு மங்கள விக்ரஹத்துடன் விளங்கும் மகார ஸ்வரூபியான பரமேஸ்வரனுக்கு வணக்கம்
ఆకాశగంగను పోసి అరగదీసిన చందనముతో అర్చించబడినవాడు అనగా (ప్రకృతి తత్వాన్నే చందనముగా పూయబడినవాడు), నందీశ్వరుడు మొదలైన ప్రమథ గణములకు అధినాయుకుడు (మనస్సు బుద్ధి చిత్త అహంకారములు అనే ప్రమథ గణములకు నాయకుడు - ఆత్మస్వరూపి), మందారాది బహుపుష్పములతో పూజించబడినవాడు (ఇంద్రియాది మనోవృత్తులనే పుష్పములతో విషయసంపర్కాన్ని పొందుతున్నవాడు) మ అక్షరస్వరూపుడు (ఏ ఉపాధికి పరిమితి కానివాడు) అయిన శివునకు నేను నమస్కరిస్తున్నాను.
श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय ॥ ३ ॥
ಸುಖಕರನೂ, ಪಾರ್ವತೀವದನವೆಂಬ ಕಮಲವನ್ನು ಅರಳಿಸುವ ಸೂರ್ಯನೂ, ದಕ್ಷಯಜ್ಞ ಘಾತಕನೂ, ನೀಲಕಂಠನೂ, ವೃಷಭಧ್ವಜನೂ, 'ಶಿ' ಕಾರ ರೂಪನೂ ಆದ ಆ ಶಿವನಿಗೆ ನಮಸ್ಕಾರವು.
Prostration to Lord Shiva, the destroyer of the sacrifice of Daksha, who has a blue-hued neck, who is the Sun in whose presence the lotus-like face of Parvathi blossoms, whose banner bears the emblem of the Bull and who is the form of the syllable 'Shi' (शि).
இந்த சுலோகம் மூன்றாவது அக்ஷரமான ஶி என்பதில் ஆரம்பிக்கின்றது. சிவபெருமான் உலகங்களுக்கெல்லாம் நன்மை செய்கின்றவர். ஜ்யோதி ஸ்வரூபி. பார்வதி தேவியின் வதனமாகிய தாமரையை மலரச்செய்கின்றவர். தக்ஷனுடைய கர்வத்தை ஒடுக்க அவனுடைய யாகத்தை அழித்தவர். தேவாசுரர்களைக் காப்பதற்காக ஹாலாஹலம் என்ற விஷத்தையருந்தியவர். விருஷபத்தைக் கொடியாகக் கொண்டவர். ஶிகாரஸ்வரூபியான அப்பெருமானுக்கு வணக்கம் செலுத்தவேண்டும். சூரியன் உதித்தவுடன் தாமரை மலர்ந்து அழகிய தோற்றத்துடன் விளங்குகின்றது. அது போல பார்வதீ தேவியின் முகமும் சிவனுடைய முகத்தைக்கண்டவுடன் மலர்ச்சியுற்றுப் பொலிவு பெறுகின்றது. ஆதலால் பார்வதீ தேவியின் முகத்தைத் தாமரையாகவும் சிவபெருமானை சூரியனாகவும் உருவகப்படுத்தி வர்ணித்திருக்கின்றார். ஒரு சமயம் தக்ஷன் சிவபெருமானை அவமதித்ததால் அவர் அவனுடைய யாகத்தை அழித்து அவனுடைய கர்வத்தையும் ஒழித்தார். இதனால் சிவனை இகழ்ந்தவர்கள் வாழ முடியாது என்பது தெளிவுபடுகின்றது. அவர் பக்த பராதீனர். தன் பக்தர்களுக்கேற்படும் இன்னல்களை நீக்கி அவர்களுக்கு அருள்புரிகின்றார் என்பது நீலகண்டர் என்ற சொல்லால் காட்டப்படுகின்றது. அவர் வெற்றிவீரர். வெற்றிக்கொடியை நிலைநாட்டியவர் என்பது வ்ருஷத்வஜாய என்பதால் விளக்கப்படுகின்றது. ஶி என்ற அக்ஷரமும் அவரையே குறிக்கிறது.
మంగళకరుడు, పార్వతీముఖము అనే పద్మమును వికసింపజేయు సూర్యుడు (బుద్ధికి ధర్మప్రచోదనచేసే సౌరశక్తి), దక్షుని యజ్ఞమును నాశనముజేసిన వాడు (దంభా అహంకారములు నాశమొందించేవాడు), నీలకంఠుడు (ప్రాణాన్ని పణంగా ఆపన్నహస్తుడు), జండాపై ఎద్దునుగలవాడు (మేరుదండము నిటారుగా ఉంచుకున్నవాడు), శి అను అక్షరస్వరూపుడైన (మంగళకరుడు) అయిన శివునకు నేను నమస్కరిస్తున్నాను.
पन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय॥ ४ ॥
ವಸಿಷ್ಠ, ಅಗಸ್ತ್ಯ, ಗೌತಮರೇ ಮೊದಲಾದ ಮುನಿಗಳಿ೦ದಲೂ, ದೇವತೆಗಳಿಂದಲೂ ಪೂಜಿತನಾದ ಮತ್ತು ಚಂದ್ರ, ಸೂರ್ಯ, ಅಗ್ನಿಗಳನ್ನು ಕಣ್ಣಾಗಿವುಳ್ಳವನಾದ, 'ವ' ಕಾರ ರೂಪನಾದ ಶಿವನಿಗೆ ನಮಸ್ಕಾರವು.
I bow respectfully to Lord Shiva who is worshipped by gods and by the foremost sages like Vasistha, Agastya and Gautama, who has the sun, the moon and the fire as His eyes and who is of the form of the syllable 'Va' (ब).
இந்த சுலோகம் நான்காவது அக்ஷரமாகிய வ என்பதில் தொடங்குகிறது. சிவபெருமான் மிகுந்த மகிமை வாய்ந்தவர். வஸிஷ்டர், அகஸ்தியர், கௌதமர் முதலிய மாமுனிவர்களும் இந்திராதி தேவர்களும் அவரை வழிபடுகின்றனர். சந்திரன் ஸூர்யன், அக்நி இம்மூவரும் அவருடைய மூன்று கண்களாய் விளங்குகின்றனர். அவர் வகார ரூபி. அவரை நாம் போற்றவேண்டியது அவச்யம்.
వసిష్ఠుడు, అగస్త్యుడు, గౌతముడు, మొదలగు మునీంద్రులచేత పూజింపబడిన-వాడు (వేదవేద్యుడు). జటాజూటమునందు చంద్రుడిని, సూర్యుడిని అగ్నిని ఈ మువ్వురుని మూడు కనులుగా కలవాడు (సర్వకాలాతీతుడు) వ అను అక్షరస్వరూపుడు (పూజనీయుడు) అయిన శివునకు నేను నమస్కరిస్తున్నాను.
दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय ॥ ५ ॥
ಯಕ್ಷಸ್ವರೂಪನೂ, ಜಟಾಧಾರಿಯೂ, ಪಿನಾಕಪಾಣಿಯೂ, ಶಾಶ್ವತನೂ, ದಿವ್ಯನೂ, ದೇವೇಶನೂ, 'ಯ' ಕಾರ ರೂಪನೂ ಆದ ಶಿವನಿಗೆ ನಮಸ್ಕಾರವು.
Salutation to Lord Shiva, the eternal celestial Being, bedecked with matted locks, wielding in his hand the Pinaka bow, having ethereal space as his clothes, who expresses himself in the form of Yaksha and who has the form of the syllable 'Ya' (य).
இந்த சுலோகம் ஐந்தாவது அக்ஷரமான ய என்பதில் ஆரம்பமாகின்றது, தேவாஸுர யுத்தத்தில் ஜயமடைந்த தால் செருக்குற்று ஈசுவரனை மறந்த தேவர்களை அநுக்ரஹிக்க அவர்கள் திகைத்து நடுங்கும்படி அவர்கள் முன்னிலையில் பெரும் ஜோதியாக யக்ஷ உருவத்துடன் தோன்றியவர். அவருடைய சிரஸில் ஜடையும் கையில் பிநாகம் என்ற வில்லும் காணப்படுகின்றன. இவரே எப்பொழுதும் உள்ளவர். அழிவற்றவர். தேவாதி தேவனும் அவரே. அவரே திகம்பரனாகவும் தோன்றுகின்றார். இவ்வாறு ஸர்வ வல்லமை பொருந்திய யகார ரூபியான அப்பெருமானை நாம் போற்றுவோமாக. இந்த சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தை அனுதினமும் தம் மனதில் அனுஸந்தானம் செய்கின்றவர்கள் சிவ ஸாயுஜ்யமெய்துவார்களென்பது திண்ணம்.
యక్షస్వరూపుడు (కంటికి కనబడనివాడు), జటలను ధరించినవాడు (మహాతపస్వి), పినాకమనే ధనుస్సును చేతిలో పట్టుకున్నవాడు (ప్రాణాయామ పరాయణుడు), సనాతనుడు (నిత్యుడు), ప్రకాశస్వరూపుడు, దిగంబరుడు (సర్వవ్యాపి), య అను అక్షరస్వరూపుడు (పరమ పవిత్రుడు) అయిన శివునకు నేను నమస్కరిస్తున్నాను.