चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां भज भज लक्ष्मीनरसिंहानघ पदसरसिजमकरन्दम् ॥ १ ॥
ಎಲೈ, ಮನಸ್ಸೆಂಬ ದುಂಬಿಯೇ, ನಿನ್ನ ಪ್ರಭುವಾದ ಜೀವನಿಗೆ ಪ್ರಿಯವನ್ನು ಬಯಸುವೆಯಾದರೆ ಯಾವಾಗಲೂ ಶ್ರೀ ಲಕ್ಷ್ಮೀನರಸಿಂಹನ ಪೂಜೆಯನ್ನು ಮಾಡುತ್ತಿರು. ಪ್ರತಿಬಿಂಬವು ಸುಂದರವಾಗಿರಬೇಕೆಂದು ಬಯಸುವವನು ಪ್ರತಿಬಿಂಬಕ್ಕೆ ಮೂಲವಾದ ಬಿಂಬವನ್ನು ಅಲಂಕರಿಸುತ್ತಾನೆ. ಎಲೈ ಮನಸ್ಸೆಂಬ ದುಂಬಿಯೇ, ಸಂಸಾರವೆಂಬ ನೀರಸವಾದ ಮರುಭೂಮಿಯಲ್ಲಿ ಏಕೆ ವ್ಯರ್ಥವಾಗಿ ಸಂಚರಿಸುತ್ತೀಯೆ? ಶ್ರೀ ಲಕ್ಷ್ಮೀನರಸಿಂಹಸ್ವಾಮಿಯ ಪವಿತ್ರವಾದ ಪಾದಕಮಲದ ಮಧುವನ್ನು ಸೇವಿಸು! ಸೇವಿಸು!!
O, Mind, if you are bent upon doing good to your master JIVA (the Soul), always worship Sri Lakshminarasimha. For, a thoughtful man decorates the object when he desires to adorn the image. O, Bee-like mind, why do you wander in vain in the arid field of Samsara (the phenomenon of birth after birth). Quickly turn your mind to the worship of the lotus-feet of Sri Lakshminarasimha and drink deep the honey of His grace present in his lotus feet.
வண்டு தேனை அருந்துவதற்காக தேன் சொரியும் புஷ்பங்களைத் தேடியலைவது ஸஹஜம். ஜலமில்லாமல் ஈரப்பசையே யில்லாமல் இருக்கும் பூமியில் செடியுமிராது, புஷ்பமும் இராது. அங்கே போய் சாதாரண வண்டு கூட அலையாது. அப்படியிருக்க ஸர்வோத்கிருஷ்டமான மனுஷ்ய ஜன்மத்தையடைந்து பகுத்தறிவுடன் விளங்குகிறவன் அவ்விதம் அலைவது நியாயமாகுமா? ஆனால் ஸாமான்ய ஜனங்கள் தன் பகுத்தறிவை இழந்து தன் மனதை எவ்வித பிரயோஜனமுமில்லாத உலக வாழ்க்கையில் வீணாக அலையச் செய்து அதன் மூலமாக ஏதோ ஸுகத்தையடைத்து விட யத்தனிக்கிறார்கள். அது ஒருநாளும் நடக்கப் போகிறதில்லை. பகவானுடைய பாதாரவிந்தமோ சாசுவதமாக இம்மை, மறுமை, மோக்ஷம் வரை சகலவிதமான சுகங்களையும் எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்க ஸித்தமாகவிருப்பதால் மனதை அந்த பாதாரவிந்த ஸேவையில் நிரந்தரமாய் ஏவுவதுதான் வாஸ்தவமான வழி. தவிறவும் ஜீவனுடைய தத்வத்தை விசாரிக்கும் போது சுத்த சைதன்ய ரூபமான பிரஹ்மமே அந்தக்கரணம் என்கிற உபாதியில் பிரதிபிம்பிக்கும் போது ஜீவன் என்ற பெயரை அடைகிறதென்று சொல்லப்படுகிறபடியால், பிரஹ்மத்தைத் தவிற ஜீவனுக்கு தனி சத்தை கிடையாது. கண்ணாடியில் பிரதிபலிக்கும் முகத்திற்கு அலங்காரம் செய்ய நினைத்தால் அதற்கு ஒரே வழி தான் உண்டு. அதாவது வாஸ்தவமான முகத்திற்கு அலங்காரம் செய்தால் உடனே அந்த அலங்காரம் பிரதிபிம்பத்திலும் தோன்றும். இதை விட்டு விட்டு பிரதிபிம்பத்திற்கே நேரே அலங்காரம் செய்துவிடலாமென்று நினைப்பது வெறும் அசட்டுத்தனம். ஒரு நாளும் ஸாத்தியமாகாது. ஆகையால் பிரதிபிம்பமான ஜீவனுக்கு ஏதேனும் பிரியத்தைச் செய்யவேண்டுமென்று நினைத்தால் பிம்பமாயிருக்கும் பிரஹ்மத்திற்குத்தான் செய்யவேண்டுமே தவிர நேராக ஜீவனுக்கு செய்து விடுவது ஸாத்தியமேயில்லை. பிம்பத்திற்கு அலங்காரம் செய்துவிட்டால் பிரதிபிம்பத்திற்கு அலங்காரம் வேண்டியதில்லையென்று செய்யவும் முடியாது. ஆகையால் பகவானுக்குச் செய்யும் ஸேவை மூலமாகத் தான் ஜீவனுக்கு சிரேயஸ் ஏற்பட வேண்டும். அதைவிட்டு ஜீவனுக்கென்று தனியாக பிரயத்தினம் செய்து ஸுகத்தை ஸம்பாதித்து விடலாமென்று நினைப்பது நடக்காத கார்யம். இவ்விதமாக ஜீவ தத்வமிருக்கிறதென்று உணர்ந்து பகவானுடைய பஜனத்திலேயே ஈடுபடவேண்டுமென்று ஸ்ரீமத் ஆசார்யார் உபதேசிக்கிறார். உலகத்தில் ஸகல ஜனங்களும் ஸுகத்தையடையக் கருதி ஸுக ஸாதனங்களைத் தேடி ஸம்பாதிப்பதற்கு பலவித பிரயத்தினங்கள் செய்து வருகிறார்களேயென்றால், அவர்கள் இந்த ஜீவ தத்வத்தையறியாதவர்கள். தவிரவும் வெளியிலுள்ள பதார்த்தங்களை ஸுக ஸாதனங்களாக எண்ணுவதே பிசகு என்று அடுத்த கலோகத்தில் காட்டுகிறார்.
चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां भज भज लक्ष्मीनरसिंहानघ पदसरसिजमकरन्दम् ॥ २ ॥
ಭ್ರಮೆಯಿಂದ ಕಪ್ಪೆಚಿಪ್ಪು ಬೆಳ್ಳಿಯಾಗಿ ತೋರಿದರೆ, ಅದರಿಂದ ಬೆಳ್ಳಿ ಯ ಒಡವೆಗಳನ್ನು ಮಾಡಲು ಸಾಧ್ಯವಾದೀತೆ? ಆಗುವದಾದರೆ ದುಃಖಮಯವಾದ ಈ ನಿನ್ನ ಸಂಸಾರವು ಸುಖವನ್ನು ಕೊಡುವುದರಲ್ಲಿ ಸಮರ್ಥವಾದೀತು. ಎಲೈ ಮನಸ್ಸೆಂಬ ದುಂಬಿಯೇ, ಸಂಸಾರವೆಂಬ ನೀರಸವಾದ ಮರುಭೂಮಿಯಲ್ಲಿ ಏಕೆ ವ್ಯರ್ಥವಾಗಿ ಸಂಚರಿಸುತ್ತೀಯೆ? ಶ್ರೀ ಲಕ್ಷ್ಮೀನರಸಿಂಹಸ್ವಾಮಿಯ ಪವಿತ್ರವಾದ ಪಾದಕಮಲದ ಮಧುವನ್ನು ಸೇವಿಸು! ಸೇವಿಸು!!
Is it ever possible to make ornaments of silver from the glittering oyester-shell (or mollusk-shell) which due to illusion, appears like silver? If it is possible then you can hope to derive happiness in this world of misery. O, Bee-like mind, why do you wander in vain in the arid field of Samsara (the phenomenon of birth after birth). Quickly turn your mind to the worship of the lotus-feet of Sri Lakshminarasimha and drink deep the honey of His grace present in his lotus feet.
வெளிப்பொருள்களிலிருந்து ஸுகம் கிடைப்பதாக நினைப்பதே வெறும் பிரமம், அவைகளுக்குத் தனித்து ஸத்தையும் பிரகாசமுமில்லாமலும் வெறும் தோற்றமாகவும் ஜடமாகவுமே அவைகள் வாஸ்தவத்தில் இருந்து வருவதால் அவைகளிலிருந்து ஆனந்தம் எப்படி ஏற்பட முடியும்? பிரஹ்மத்திலுள்ள ஸத்தைக்கும் பிரகாசத்திற்கும் நேர்மாறாக பிரபஞ்சத்தின் தத்வம் தோற்றமாகவும் ஜடமாகவும் இருப்பது போலவே பிரஹ்மத்திலுள்ள ஆனந்தத்திற்கு நேர்மாறான துக்கமேதான் பிரபஞ்சத்தின் தன்மையாகும். அப்படியிருக்க, அதிலுள்ள பதார்த்தங் களிலிருந்து ஸுகத்தை ஸம்பாதித்து விடலாமென்று நினைப்பது கொஞ்சமேனும் நியாயமில்லை. தரையில் உள்ள கிளிஞ்சலைப் பார்த்து நாம் எவ்வளவு திடமாக வெள்ளிதான் என்று நினைத்துக்கொண்டாலும், அது வெள்ளிதான் என்ற தீர்மானத்துடன் எவ்வளவு ஆவலுடன் அதைக் கைப்பற்றினாலும் அது தன் சொந்த ஸ்வரூபமான கிளிஞ்சல் என்ற தன்மையை விட்டு நமக்காக வெள்ளியாக ஆகிவிடுமா? அதில் தோன்றும் வெள்ளியைக் கொண்டு ஏதேனும் நகை செய்யமுடியுமா? அப்படியேதான் வெறும் தோற்றமாயிருக்கிற பிரபஞ்சத்திலிருந்து ஸுகத்தையடையலாமென்று நினைப்பதும். மேலும் அவ்விதம் நினைத்து பிரவிருத்தி செய்தால் ஸுகத்தையடையவில்லை யென்பதுடன் நிற்காமல் துக்கத்தையும் அனுபவிக்கும்படி ஏற்படும். ஆகையால் வாஸ்தவமாக நித்யானந்த ஸ்வரூபியாயிருக்கிற பகவானை ஸேவிப்பதுதான் ஸுகத்தையடைவதற்கு ஸாதனம்.
चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां भज भज लक्ष्मीनरसिंहानघ पदसरसिजमकरन्दम् ॥ ३ ॥
ಎಲೈ, ಚೇತೋಭೃಂಗವೇ, ಸದೃಶವಾದ ರೂಪವಿದ್ದದ್ದರಿಂದ ಬೂರುಗದ ಹೂವನ್ನು ನೆಲದಾವರೆಯೆಂದು ಭ್ರಾಂತಿಪಟ್ಟಿದ್ದೀಯೆ, ಇದರಲ್ಲಿ ಸುಗಂಧವಾಗಲಿ, ರಸವಾಗಲಿ ಇರುತ್ತದೆಯೆ? ಹಾಗೆಯೇ ನೀರಸವಾದ ಈ ಜಗತ್ತಿನಲ್ಲಿ ಸುಖವಿದೆಯೆಂಬುದು ನಿನಗೆ ಭ್ರಮೆ. ಎಲೈ ಮನಸ್ಸೆಂಬ ದುಂಬಿಯೇ, ಸಂಸಾರವೆಂಬ ನೀರಸವಾದ ಮರುಭೂಮಿಯಲ್ಲಿ ಏಕೆ ವ್ಯರ್ಥವಾಗಿ ಸಂಚರಿಸುತ್ತೀಯೆ? ಶ್ರೀ ಲಕ್ಷ್ಮೀನರಸಿಂಹಸ್ವಾಮಿಯ ಪವಿತ್ರವಾದ ಪಾದಕಮಲದ ಮಧುವನ್ನು ಸೇವಿಸು! ಸೇವಿಸು!!
O, Bee-like mind, if you confuse the 'Buruga' flower (a type of silk-cotton flower) for a lotus, because of similarity in appearance, can that flower give you fragrance? Similarly, can this sorrowful and miserable world make you happy? O, Bee-like mind, why do you wander in vain in the arid field of Samsara (the phenomenon of birth after birth). Quickly turn your mind to the worship of the lotus-feet of Sri Lakshminarasimha and drink deep the honey of His grace present in his lotus feet.
நாம் ஒரு பொருளை வேறொரு பொருளாக நினைத்ததற்காக அப்பொருள் நாம் நினைக்கிற பொருளாக மாறிவிடாது. நாம் நினைக்கிற பொருளிலுள்ள குணங்கள் இப்பொருளில் ஒருக்காலும் வராது என்பதற்கு வேறு திருஷ்டாந்தம் இங்கு கொடுக்கப்படுகிறது. சால்மலிப் பூவில் நறுமணமோ நல்ல ரஸமோ கிடையாது. மிகவும் விரஸமானது. நிலத்தாமரை மலரில் நல்ல வாசனையும் நல்ல ரஸமும் உண்டு. இந்த சால்மலிப் பூவை நிலத்தாமரை என்று ப்ராந்தியால் எண்ணியதற்காக நல்ல ரஸமும் நல்ல வாஸனையும் சால்மலிப் பூவில் வந்து விடுமா? ஆகவே விரஸமான சால்மலி மலரை நிலத்தாமரை என்று எண்ணி அதைச் சுற்றிச் சுற்றி வரும் வண்டிற்கு கொஞ்சம்கூட மணமோ, வாஸனையோ கிடைக்காமல் முயற்சி எல்லாம் வீணாகத் தான் ஆகும். அதுபோல் இப்பிரபஞ்ச வாழ்க்கையிலும் நாம் கொஞ்சம்கூட உண்மையான ஸுகத்தைப் பெறமுடியாது. பகவத் சரணத்தைப் பற்றிக் கொண்டால்தான் நித்யானந்தத்தைப் பெறமுடியும்.
चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां भज भज लक्ष्मीनरसिंहानघ पदसरसिजमकरन्दम् ॥ ४ ॥
ಹೂಮಾಲೆ, ಶ್ರೀಗಂಧ, ವನಿತೆ - ಮುಂತಾದ ವಿಷಯಗಳು ಸುಖದಾಯಕಗಳೆಂದು ತಿಳಿದು ಅವುಗಳಲ್ಲಿ ವಿಹರಿಸುತ್ತಿದ್ದೀಯೆ. ಎಲೈ, ಚೇತೋಭೃಂಗವೇ, ಇವೆಲ್ಲಾ ಕ್ಷಣಕಾಲ ಸುಗಂಧವನ್ನು ಕೊಟ್ಟು ನಶಿಸುವ ಸಂಪಿಗೆಯ ಹೂವಿನಂತೆ ಭೋಗಿಸಿದ ಮೇಲೆ ಇವು ನಿನ್ನನ್ನು ಖಂಡಿತ ನಾಶಗೊಳಿಸುವುವು. ಎಲೈ ಮನಸ್ಸೆಂಬ ದುಂಬಿಯೇ, ಸಂಸಾರವೆಂಬ ನೀರಸವಾದ ಮರುಭೂಮಿಯಲ್ಲಿ ಏಕೆ ವ್ಯರ್ಥವಾಗಿ ಸಂಚರಿಸುತ್ತೀಯೆ? ಶ್ರೀ ಲಕ್ಷ್ಮೀನರಸಿಂಹಸ್ವಾಮಿಯ ಪವಿತ್ರವಾದ ಪಾದಕಮಲದ ಮಧುವನ್ನು ಸೇವಿಸು! ಸೇವಿಸು!!
O, Mind, you are revelling in the pleasures of fragrant flowers, sandal paste and women, thinking that they would give you eternal happiness. They are ephemeral like the champaka flower. They win you with their trifling enjoyment but surely lead you ultimately to eternal grief and misery. O, Bee-like mind, why do you wander in vain in the arid field of Samsara (the phenomenon of birth after birth). Quickly turn your mind to the worship of the lotus-feet of Sri Lakshminarasimha and drink deep the honey of His grace present in his lotus feet.
விஷய போகங்களில் தாத்காலிகமாக ஏதோ ஸுகம் ஏற்படுவதாகத் தோன்றின போதிலும் அது கடைசியில் துக்கத்திலேயே கொண்டு விடுமென்பது அனுபவ ஸித்தம். வாஸனை நன்றாயிருக்கிறதென்று சம்பக புஷ்பத்தை வெகுநேரம் முகர்ந்து கொண்டிருந்தால் மூக்கில் ரக்தம் வந்து விடுமென்று சொல்வார்கள். மேலும் சம்பக புஷ்பத்தின் வாஸனையால் இழுக்கப்பட்டு அவ்விருக்ஷத்தின் ஸமீபத்தில் போனால் அதில் ஸாதாரணமாக வஸித்துவரும் சர்ப்பத்தினால் தீண்டப்படும்படியும் ஏற்படலாம். விஷய போகத்தில் ஸுகமிருப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட கடைசியில் துக்கமே ஏற்படுவதால் அதைத் தேடுவது பிரயோஜனமற்றதென்பது மாத்திரமல்ல அனர்த்தகரமும்கூட பசுவத்ஸேவை ஒன்றுதான் துக்க ஸம்பந்தமன்னியில் சாசுவதமான ஸுகத்தைக் கொடுக்கும்.
चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां भज भज लक्ष्मीनरसिंहानघ पदसरसिजमकरन्दम् ॥ ५ ॥
ಎಲೈ ಮನಸ್ಸೇ! ನಿನಗೆ ಹಿತಕರವಾದ ಒಂದು ಮಾತನ್ನು ಹೇಳುತ್ತೇನೆ. ನೀನು ನಿಜವಾದ ಸುಖವನ್ನು ಬಯಸುವೆಯಾದರೆ ಕನಸ್ಸಿನಲ್ಲಿ ಕಂಡಿದ್ದೆಲ್ಲಾ ಹೇಗೆ ಸುಳ್ಳೆಂದು ಅರಿಯುವೆಯೋ ಹಾಗೆಯೇ ಜಾಗ್ರತ್ತಿನಲ್ಲಿ ಇರುವುದನ್ನೂ ಸಹ ಸುಳ್ಳೆಂದು ತಿಳಿ. ಎಲೈ ಮನಸ್ಸೆಂಬ ದುಂಬಿಯೇ, ಸಂಸಾರವೆಂಬ ನೀರಸವಾದ ಮರುಭೂಮಿಯಲ್ಲಿ ಏಕೆ ವ್ಯರ್ಥವಾಗಿ ಸಂಚರಿಸುತ್ತೀಯೆ? ಶ್ರೀ ಲಕ್ಷ್ಮೀನರಸಿಂಹಸ್ವಾಮಿಯ ಪವಿತ್ರವಾದ ಪಾದಕಮಲದ ಮಧುವನ್ನು ಸೇವಿಸು! ಸೇವಿಸು!!
O, Mind, listen to my good counsel. If you truly wish for eternal happiness, deem all that you see in the waking state false, like objects seen in a dream. O, Bee-like mind, why do you wander in vain in the arid field of Samsara (the phenomenon of birth after birth). Quickly turn your mind to the worship of the lotus-feet of Sri Lakshminarasimha and drink deep the honey of His grace present in his lotus feet.
தூங்கும் போது ஸ்வப்னம் காண்பதில் நாம் நேரில் பார்ப்பதாகவே தோன்றும் பதார்த்தங்கள் வாஸ்தவத்தில் கிடையவே கிடையாது என்கிற விஷயம் யாவரும் அறிந்ததே. ஸ்வப்ன காலத்தில் அப்பதார்த்தங்கள் ஸுகத்தைக் கொடுத்தனவேயென்று நினைத்து யாரேனும் விழித்துக்கொண்ட பிற்பாடு அவைகளைத் தேடியலைவதுண்டா? அப்பதார்த்தங்கள் இருப்பதாகத் தோன்றும் காலத்திலும் வாஸ்தவமாக இருந்திருப்பதில்லை யென்ற உறுதி நமக்கிருப்பதினால் அவைகளை ஸம்பாதிக்கப் பிரயத்தினம் செய்கிறதில்லை. அப்படியேதான் ஜாக்கிரத் காலத்தில் நாம் நேரில் பார்த்து அனுபவிப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பதார்த்தங்கள் யாவும் நாம் அக்ஞான மாகிற பெரிய தூக்கத்திற்கு வசப்பட்டுக்கொண்டிருக்கிற வரையில் தான் தோன்றும். அக்ஞானம் நிவ்ருத்தியாகி நாம் விழித்துக்கொண்டு நம் ஸ்வயம்பிரகாசமான ஆத்ம நிலையை அடைந்துவிட்டால் இத்தோற்றம் யாவற்றும் வாஸ்தவமில்லை யென்ற உறுதியேற்பட்டு அத்தோற்றமுமே மறைந்துவிடும். இந்த தத்துவத்தை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்தோமேயானால் உலகத்தில் எவ்வளவு ரமணீயமான பதார்த்தமாகவிருந்தாலும் அது நம் மனதை இழுக்காது. எவ்வளவு பயங்கரமான பதார்த்தமாகவிருந்தாலும் அது நம்மை பயமுறுத்தாது. உலகத்தில் விருப்பம், வெறுப்பு, இவைகளைக் கொடுக்கக்கூடிய பதார்த்தங்கள் எல்லாம் கொஞ்சமேனும் வாஸ்தவமல்லவென்ற எண்ணம் ஏற்பட்டவுடன் வண்டுபோல் அங்குமிங்கும் அலையும் மனஸ் நிச்சலமாகி சாசுவதமான ஆனந்த நிலையை அடைந்துவிடும். ஸதா அலைந்துகொண்டிருக்கும் மனதை நிச்சலமாகச் செய்யவேண்டுமானால் அதை ஓரிடத்தில் கட்டி வைக்கவேண்டும். அந்த கட்டிவைக்கவேண்டிய இடம் பகவானுடையபாதாரவிந்தமேயென்று ஸ்ரீமத் ஆசார்யார் நமக்கு உபதேசிக்கிறார்