श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

स्तोत्राणि

Translations

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியாகிய பகவான் அவதரித்து. ஸ்ரீ கோவிந்த காலடியில் ஸ்ரீசங்கரராக பகவத்பாதரிடம் உபதேசம் பெந்து ஸூத்ரபாஷ்யம் முதலான உயர்ந்த பல கிரந்தங்களை இயற்றி எங்கும் ஸஞ்சாரம் செய்து ஔபரிஷதமான அத்வைத ஐத்தாந்தத்தை ஸ்தாபித்து, அவதார கார்யம் பூர்த்தி யானதும் கைலாஸத்திற்குப் புறப்படும் ஸமயம். கிள சிஷ்யர்கள் 'ஸூத்ரபாஷ்யம் முதலான கிரந்தங்களை வாசித்துத் தெரிந்துகொள்ள புத்தி ஸாமர்த்தியமில்லாத ஸாமான்ய அதிகாரிகளும் சிரேயஸ்ஸை அடைய மார்கத்தை உபதேசத்து அருளவேண்டும்' என்று பிரார்த்திக்கவே அப்பொழுது இந்த ஐந்து சுலோகங்களையும் உபதேசித்தார் இதிலுள்ள ஒவ்வொரு சுலோகமும் குரு சிஷயனுக்குச் செய்யும் உயர்ந்த உபதேச ரூபமாக அமைந்திருப்பதால் இதை 'உபதேச பஞ்சகம்* என்றும், 'பஞ்சரத்னம்' என்றும் சொல்வது உண்டு. மேலும் வேதாத்யயனம் செய்ய ஆரம்பிப்பது முதல் பரப்ரஹ்மநிலையை அடைவது வரை மனதனைக் கழருந்து படிப்படியாக மேலே அழைத்துச்செல்வதால் 'லோபான பஞ்சசம் என்றும் கூறுகிறார் கள். நன்கு கவனித்துப் பாரத்தோமானால் ஒவ்வொரு சுலோகத்திலும் எட்டு உபதேசங்கள் அமைந்திருக்கின்றன. ஆகவே நாற்பது உபதேசங்கள் கொண்டது இச்சிறியநூல், அதாவது மோக்ஷம் என்னும் ப்ராஸாதத்தைச் சுலபமாக அடைவதற்கு 40 படிக்கட்டுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார் அதிகாரியாகிறான். இந்த சிலையிலிருகது ஒரு மனிதன் எந்த வர்தனங்களை கைக்கொண்டு படிப்படியாக முன்னேறி ஸ்ரீ பகவத்பாதர். உபாயனம் ஆளபிறகுதான் வேதத்தில் எந்த ப்ரஹ்மானத்த சிலையை அடைகிறான் என்பதை இந்த கிரந்தத் நில் காணலாம். பின்வரும் முறையில் கிரமமாக ஸோபானங் கள் அமைந்திருக்கின்றன, அத்யயனம், நிஷித்த காமிய த்யாகம் கர்மயோகம், சித்தகத்தி, வைராக்யம், முமுக்ஷத்வம், ஸக்யாஸம், ஸத்ஸங்கம் ஈசுவரபத்தி, சமாதிஷட்கம், குரு அபிகமம், குரு ஸேவா, பிரணவஜபம், சிரவணம், மனனம், நிதித்யாஸனம், அஹங்கார மமகாசத்யாகம், மௌனம், ஜீவன்முக்தசர்யை, விதேஹமுக்தி இவை பின்வரும் சுலோகங் களில் முறையாக விளக்கப்பட்டுள்ளன
वेदो नित्यमधीयतां तदुदितं कर्म स्वनुष्ठीयतां तेनेशस्य विधीयतामपचितिः काम्ये मतिस्त्यज्यताम् ।
पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां आत्मेच्छा व्यवसीयतां निजगृहत्तूर्णं विनिर्गम्यताम् ॥ १॥

ಯಾವಾಗಲೂ ವೇದವನ್ನು ಅಧ್ಯಯನ ಮಾಡು, ಆ ವೇದ ಮಂತ್ರದಿಂದ ಭಗವಂತನ ಪೂಜೆಯನ್ನು ಮಾಡು. ಅದರಲ್ಲಿ ಹೇಳಿರುವ ಕರ್ಮಗಳನ್ನು ಆಚರಿಸು. ಕಾಮ್ಯ ಕರ್ಮದಲ್ಲಿ ಬುದ್ಧಿಯನ್ನಿರಿಸಬೇಡ. ಈ ರೀತಿಯಿಂದ ಪಾಪರಾಶಿಯನ್ನು ನಾಶಮಾಡಿಕೊ, ಸಂಸಾರಸುಖದಲ್ಲಿ ದೋಷವಿದೆಯೆಂಬುದನ್ನು ನೆನಪಿನಲ್ಲಿಡು. ಅನಂತರ ನಿನ್ನ ಮನೆಯಿಂದ ಬೇಗನೆ ಹೊರಟುಬಿಡು.

Study the Veda daily. Diligently do the duties enjoined therein. Worship the Lord with the Vedic hymns, but abstain from doing anything which is intended for the gratification of selfish desires. Thus clear yourself of all sins. Ponder deeply over the evil consequences of worldly pleasures. Assure yourself that you desire to attain the Atman alone and then hurry to depart from your earthly home.

முதல் சுலோகத்தில் ப்ரஹ்மசாரி, கிருஹஸ்தன், வானப்ரஸ்தன் இவர்களின் (ஞானஸாதனமான) தர்மங் களைக் கூறி முடிவில் ஸந்யாஸத்தையும் காட்டுகிறார்:முதல் சுலோகத்தில் எட்டு உபதேசங்கள் இருக்கின்றன. தினமும் வேதாத்யயனம் செய்யவேண்டும் என்பது முதல் உபதேசம். உபநயனத்திற்குப்பின் என்று சேர்த்துக்கொள்ளவேண்டும். உபநயனத்திற்கு முன் இஷ்டப்படி எங்கும் செல்லலாம். இஷ்டப்படி பேசலாம் இஷ்டப்படி சாப்பிடலாம். உபநயநமானதும் சாஸ்திரக் கட்டுப்பாட்டுக்கு உட்படுகிறான். ப்ரஹ்மசாரிக்கு முக்யமான தர்மம் வேதாத்யயனம். இதற்காகவே ப்ரஹ்மசர்யாச்ரமம் ஏற்பட்டிருக்கிறது. முதல் உபதேசத்தால் ப்ரஹ்மசாரி தர்மம் கூறப்பட்டது. இது சிரேயோ மார்க்கத்திற்கு முதல்படி. வேதாத்யயனம் எதற்காக என்ற கேள்விக்கு தர்மாதர்மங்களைத் தெரிந்துகொள்வதற்காக என்பதுதான் சரியான பதில். திருஷ்டமான பலன் இருக்கும்பொழுது அத்ருஷ்டத்தைமட்டும் பலனாகக் கூறுவது நயாயம் அல்ல. தர்மா தர்மங்களைத் தெரிந்துகொண்டால்தான் தர்மத்தை அனுஷ்டிக்கவும் அதர்மத்தை விலக்கவும் முடியும். தர்மாதர்மங்களைத் தெரிந்துகொள்வதற்கு வேதத்தின் அர்த்தத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும். வெறும் வேதாத்யயனத்தால் அதிருஷ்டம் ஏற்பட்டாலும் முக்ய பிரயோஜனமான தர்ம அதர்மஞானம் ஏற்படாது. அதனால்தான் அத்யயனம் என்ற பதத்திற்கே அர்த்தஞானத்துடன் அத்யயனம் செய்யவேண்டும் என்று பொருள் கூறியிருக் கிறார்கள். வேதத்தின் அர்த்தம் தெரிந்தால்தான் தர்மா தர்மங்களை அறிந்துகொள்ளமுடியும். இது தர்மம், இது அதர்மம் என்பதை வேதத்தைத் தவிர வேறு हिम केले के ओतव्यः श्रुति- என்ன (ச்ரோதய்யா ச்ருதிவாக்யேப்யா - உபநிஷத் வாக்யங்கள் மூலம் ப்ரஹ்மவிசாரம் செய்யவேண்டும்) என்று கூறியிருப்பதால் ப்ரஹ்மஞானத்திற்கும் வேதாத்யயனம் வேண்டும். ஆகவே வேதத்தை அத்யயனம் செய்வதுடன் அங்கங்களையும் வாசித்து வேதார்த்தத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். இவன்தான் முதல் படியில் ஏறிவிடு கிறான். கிருஹஸ்தன் தினமும் செய்யும் பிரஹ்மயக்ஞத்தை யும் இங்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு அர்த்தஞானத்துடன் ஸாங்க வேதாத்யயனம் செய்த பிறகு கிருஹஸ்தாச்ரமத்தை அடைந்து வேதத்தில் கூறப் பட்ட ஸ்வதர்மங்களை அனுஷ்டிக்கவேண்டும். ஆத்மஞானம் ஏற்பட சித்தம் பரிசுத்தமாக இருக்கவேண்டும். பாபத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகினால்தான் சித்தம் பரிசுத்தம் ஆகும். பாபம் நீங்க ஸ்வதர்மங்களைத் தவறாது அனுஷ்டித்து வரவேண்டும். நிஷித்தமான கர்மாக்களைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரமே தடுத்துவிட்டது. காம்யகர்மாவைச் செய்யக்கூடாது என்று பின்னால் உபதேசிக்கிறார். ஆகை யால் தனக்கு ஏற்பட்ட நித்யகர்மாவையும் நைமித்திக கர்மாவையும் மட்டும் அனுஷ்டிக்கவேண்டும். இங்கு எஞ்ஜிர் (ஸ்வனுஷ்டீயதாம் நன்கு அனுஷ்டிக்கவேண்டும்) என்று கூறியிருப்பதால் பலனைக் கொஞ்சமும் எதிர்பாராமல் கடமை என்ற எண்ணத்துடன் செய்யவேண்டும் என்று கிடைக்கிறது. அப்பொழுதுதான் வயலில் களைஎடுப்பது போல் சித்தத்திலுள்ள காமம் முதலான தோஷங்கள் நீங்கும். இதையே கொஞ்சம் விளக்கி கர்மா செய்யவேண்டிய முறையை அடுத்தபடி உபதேசிக்கிறார். ஸ்வதர்மாலும் டானத்தாலேயே ஈசுவரனை பூஜிக்கவேண்டும். 'கர் तमभ्यर्य सिद्धि विन्दति मानवः (कल ஸித்திம் விந்ததி மாநவ:) என்பது கீதாவசனம். பூஜை என்பது ப்ரீதியை உண்டுபண்டும் காரியம், நம்மிடம் ப்ரீதி ஏற்படுவதற்காக பெரியவர்களை பூஜிக்கிறோம். ஈசுவரனுக்கு ப்ரீதியைக்கொடுக்கும் காரியம் அவர் கட்டளையிட்டிருக்கும் ஸ்வதர்மங்களை அனுஷ்டிப்பதுதான். அதிலும் 'நான் செய்கிறேன்' என்ற அஹங்காரமில்லாமல், பலனையும் விரும்பாமல் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்து ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவருக்கு நம்மிடம் ப்ரீதி ஏற்படும். அவர் ஆக்ஞையை மீறி ஸ்வதர்மத்தை விட்டு தன் இஷ்டப்படி கார்யங்களைச் செய்தால் ஈசுவரனுக்குக்கோபம்தான் உண்டாகும். ஈசுவரானுக்ரஹம் இருந்தால்தான் சிரமமில்லாமல் ஞான மார்க்கத்தில் செல்லமுடியும். லௌகிக விஷயங்களையும் போகத்தையும் அடைவதற்கு உபாயமாகக் கூறப்பட்ட கர்மாக்கள் காம்யம் எனப்படும். இவைகளைச்செய்யும் எண்ணமே மனதில் ஏற்படக்கூடாது. இந்த கர்மாக்களை முறைப்படி சிறிதும் வழுவாது நடத்தினால் தான் கோரிய பலன் கிடைக்கும். இப்படிச்செய்வதே மிக்க சிரமம். செய்தாலும் கிடைக்கும் பலன் அல்பமாயும் துக்கம் கலந்ததாகவும் இருக்கும். நிலையாகவும் இருக்காது. ஆசையை மேலும் மேலும் வளர்த்து தாபத்தை உண்டு பண்ணும். சாஸ்திரத்தில் கூறப்பட்ட காம்யகர்மாக்களையே செய்யக்கூடாது என்று சொல்லும்பொழுது அதே காரணத் திற்காக ஆசை நிறைவேற லௌகிகமான கார்யங்களை முமுக்ஷு ஆரம்பிக்கக்கூடாது என்பது தானாகவே கிடைக் கிறது. இவ்வாறு நிஷித்த கர்மாவையும் காம்ய கர்மாவையும் விலக்கி, பலனையும் விரும்பாமல் ஈசுவரார்பணபுத்தியுடன் நித்யநைமித்திக கர்மாக்களை மட்டும் தவறாமல் செய்து வந்தால் ஞானம் எற்பட இடைஞ்சலாக உள்ள பாபங்கள் எல்லாம் விலகி மனம் பரிசுத்தமாரும் பாபல் சிறிதுகூட தம்மிடமுள்ள பாபம் விசை உபாயத்தை மேற்கொண்டு பாபம் சேராமல் கவனித்துக்கொள் வேண்டும். பாபசுரமான காரியத்தை ஒருபோதும் செய்ம் மனம் பரிசுத்தமாய்விட்டால் உள்ளது உள்ளபடி அறியும் சக்தி அதற்கு ஏற்பட்டுவிடும். உலகப்பொருள்கள் உண்மையில் தோஷங்கள் நிறைந்துள்ளபோதிலும், நம் மனதில் கல்மஷம் இருந்தபடியால் அவை நமக்குப் புலணாக வில்லை. அதுமட்டும் அல்ல. அது நன்மை பயக்கும் என்றும் எண்ணிக்கொண்டிருந்தோம். இப்பொழுது கர்மயோகத் தால் பாபம் விலகி சித்தம் பரிசுத்தமாய்விட்டபடியால் விஷயங்களிலுள்ள தோஷங்கள் நன்கு தெரியவரும். நித்யா நித்ய விவேகத்தால் எல்லாவற்றிலும் வைராக்யம் ஏற்படும். அமிருதமாயிருந்தால்கூட விஷம் கலந்திருப்பது தெரிந்து விட்டால் யாருக்காவது அதைச் சாப்பிட ஆசை வருமா? ஆகவே பிரஹ்மலோகம்வரை எல்லா போகங்களிலும் வைராக்யம் ஏற்படுவதுதான் சித்த சுத்தியின் அடையாளம். வைராக்யத்தைக் கொண்டுதான் அவரவர்கள் சித்த சுத்தியை தீர்மானித்துக்கொள்ளவேண்டும். அதுவரை சித்ததோஷம் விலக கர்மயோகத்தை அநுஷ்டிக்கவேண்டும். ஸம்பூர்ண வைராக்யம் ஏற்பட்டபிறகு தோஷம் அற்றதும், நித்யநிரதிசய ஆனந்த ஸ்வரூபமுமான ஆத்ம ஸ்வரூபத்தை அடைவதில் தீவ்ரமான ஆவல்கொள்ள வேண்டும். இதுதான் முமுக்ஷுத்வம் என்பது. ஆத்ம ஸ்வரூபத்தைச் சரிவர உணராததால்தான் எல்லாத் துன்பங் களும் ஏற்பட்டுள்ளன. துக்கம் விலகி நித்யானந்தத்தைத் தரும் ஆத்மஞானத்தை அடையும் முயற்சியைக் கைக்கொள்ளவேண்டும். இதற்கு முதல் கார்யமாக விரைவில் தன் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பு என்று சொல்லி முதல் உபதேசத்தை முடிக் றோர். உலகத்தாரோடு ஒட்டி வாழ்ந்து வரும் வரை ஆத்த ஞானத்தை ஸம்பாதிப்பது ஸாத்யமல்ல. உலக வியவ ஹாரங்களும், ஸுகதுக்கங்களும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். கிருஹஸ்தனுக்கு வைதிக கர்மாக்கள் ஏராளமா திருப்பதால் ஆத்ம விசாரத்திற்கு அதிகமாக அவகாசம் கிடைக்காது. ஆகையால் எல்லாவற்றிலும் அபிமானத்தைத் துறந்து தனக்கென ஒரு பொருளையும் சேர்த்துக்கொள்ளாமல் த்யாகம் செய்து வீட்டைவிட்டு வெளிக்கிளம்பவேண்டும். காட்டிற்குச் செல்லவேண்டும் அதாவது விதிபூர்வகமாக ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்துகொள்ளவேண்டும். முதல் சுலோகத்தில் தன் வீட்டைவிட்டு விரைவில் வெளிக் கிளம்பு என்னும் கடைசி உபதேசத்திற்கு, இதுவரை தன்னுடையது என்று எண்ணிக்கொண்டிருந்த வீடு, மனைவி, புத்ரன், பொருள் முதலிய எல்லாவற்றிலும் அபிமானத்தை த் துறக்கவேண்டும் என்பதுதான் கருத்து.

सङ्गः सत्सु विधीयतां भगवतो भक्तिर्दृढाधीयतां शान्त्यादिः परिचीयतां दृढतरं कर्माशु संत्यज्यताम् ।
सद्विद्वानुपसर्प्यतामनुदिनं तत्पादुका सेव्यतां ब्रह्मैकाक्षरमर्थ्यतां श्रुतिशिरोवाक्यं समाकर्ण्यताम् ॥ २॥

ಸಜ್ಜನರ ಸಂಗವನ್ನು ಮಾಡು. ಭಗವಂತನಲ್ಲಿ ದೃಢವಾದ ಭಕ್ತಿಯನ್ನಿಡು. ಶಮದಮಾದಿ ಸದ್ಗುಣಗಳನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಸಂಪಾದಿಸು. ದೃಢವಾಗಿ ಅಂಟಿಕೊಂಡಿರುವ ಕರ್ಮಗಳನ್ನು ಬೇಗನೆ ಬಿಟ್ಟುಬಿಡು. ಶ್ರೇಷ್ಠರಾದ ಗುರುಗಳ ಸಾನ್ನಿಧ್ಯವನ್ನು ಹೊಂದು. ಅವರ ಪಾದಸೇವೆಯಲ್ಲಿ ನಿರತನಾಗು, ಏಕಾಕ್ಷರಬ್ರಹ್ಮವಾದ ಓಂಕಾರದಲ್ಲಿ ನೆಲೆ ನಿಲ್ಲಲು ಯತ್ನಿಸು. ವೇದಾಂತವಾಕ್ಯವನ್ನು ಶ್ರವಣ ಮಾಡು.

Seek the company of good men. Secure firm devotion to the Lord. Strenuously apply yourself to control the mind and other senses. Give up all rituals without delay. Approach a master who has realised the Truth and serve him constantly. Strive to attain the one imperishable Brahman. Heedfully listen to the sacred teachings of the Upanishads.

முதல் சுலோகத்தில் பிரஹ்மசாரி, கிருஹஸ்தன், வானப்ரஸ்தன் இவர்களைப்பற்றிக் கூறி கடைசியில் ஸந்யா ஸத்தையும் காட்டினார். எல்லாவற்றையும் துறந்த ஸந்யா ளியும் த்யாகம் செய்யாமல் கைக்கொள்ளவேண்டிய தர் மங்களை இரண்டாவது சுலோகத்தில் கூறுகிறார். மேலும், ஆத்ம விசாரத்திற்கு ஸாதனமாக விவேகம், வைராக்யம், முமுக்ஷுத்வம் என்ற மூன்றையும் முதல் சுலோகத்தில் காட்டி நான்காவதான சமாதி ஷட்கத்தையும் குருவினிடம் சென்று ஆத்மவிசாரம் செய்யும் முறையையும் இரண்டாவது சுலோகத்தில் குறிப்பிடுகிறார். எல்லா ஸங்கங்களையும் தியாகம் செய்தபோதிலும் ஸாதுக் களின் ஸங்கத்தை விடாமல் கைக்கொள்ளவேண்டும். விஷயங்களை இப்பொழுது பரித்யாகம் செய்தபோதிலும் வெகுகாலம் அநுபவித்திருப்பதால் மனதில் துர்வாஸனை நிறைந்திருக்கும். அது இவனை சமயத்தில் கிளப்பிவிடும். பெரியோர்களிடம் சேர்ந்து பழகுவதன் மூலம் ஸத்வாஸனை ஏறினால்தான் துர்வாஸனை விலகும். அப்பொழுது வைராக்யம் உறுதிப்படும். நல்ல வாஸனையுள்ள பொருளைக்கொண்டு கெட்ட நாற்றத்தைப் போக்குவதில்லையா? ஆரம்பகாலத் தில் ஸத்வகுணத்தைக் கைக்கொண்டு பின்னால் குணத்த நிலையை அடைவதுபோல் ஸாதுக்களின் ஸங்கத்தால்தான் அஸங்கமான நிலையை அடையமுடியும். பகவானிடம் அவ்யாஜமான பக்தி ஸ்திரமாக இருக்கவேண்டும். சரீரம், வாக், மனம் இவைகளால் பகவானுக்கு பிரீதி உண்டாகும் காரியங்களையே செய்யவேண்டும். ஈசுவராநுக்ரஹத்தால்தான் அதிக சிரமமில்லாமல் இடையூறு இல்லாமல் ஸுலபமாக ஞானத்தை அடையமுடியும். ஞானத்திற்கு உபகாரமான சமம் முதலிய குணங்களைப் பழக்கத்தில் கொண்டுவரவேண்டும். மனதையும் வெளிப் புலன்களையும் அடக்குதல், லௌகிக ப்ரவ்ருத்தியிலிருந்து ஓய்வு அடைதல், பொறுமை, முக்யமாக குளிர்-வெய்யில், ஸுக - துக்கங்கள் முதலானவைகளை ஸஹித்துக்கொள்ளுதல், குரு வாக்யத்திலும் வேதாந்த வாக்யத்திலும் விசுவாஸம், மனதை ஒரே இடத்தில் நிலைநிறுத்தல் இவைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தில் கொண்டுவரவேண்டும். ஞானத்திற்கு இடைஞ்சலானதும், பகவானுக்கு ப்ரீதியைக் கொடுக்காததும் பந்தத்தைக் கொடுக்கக்கூடியதுமான கார்யங்களை அறவே விட்டுவிடவேண்டும். ஸத்குருவின் உபதேசத்தால்தான் ஞானம்பெறமுடியும். வேறு மார்க்கம் கிடையாது. ஆகையால் ஸத்குருவைத் தேடிச் செல்லவேண்டும். அவர் 'ஸத்' வஸ்துவை (ப்ரஹ்மத்தை) நேரில் அறிந்தவராயிருக்கவேண்டும். ஸதாசாரஸம்பன்னராகவும் இருக்கவேண்டும். நற்கர்மம் புரிபவராயிருந்தாலும் அக்ஞானியாயிருந்தால் அவரிடம் உபதேசம் பெறமுடியாது. ஞானியாக இருந்து ஸதாசார மில்லாதவராயிருந்தால், ஞானபலத்தால் அது அவருக்கு தோஷமாகாது. ஸாதகநிலையிலிருக்கும் சிஷ்யன் அவரைப் பார்த்து அவர்போல நடக்க ஆரம்பித்துவிட்டால் கெட்டுப்போய்விடுவான். பொருத்திய குருவிடம் செல்லவேண்டும். சில மஹான்கள் ஆகையால் ஞானமும் ஆசாரமும் தங்களுக்குப் பிரயோஜனம் இல்லாவிட்டாலும் மற்றவருக்கு சழிகாட்டுவதற்காக சாஸ்திர முறை தவறது நடப்பார்கள். சாஸ்திர முறைப்படி விதயஸம்பத்துடன் கர்வம்கொள்ளாமல் குருவைத் தேடி அடைந்து அவர் பாதங்களில் சாஹகதி செய்யவேண்டும். அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தினத் தோறும் குருவின் பாதத்தை ஸேவிக்கவேண்டும். அவரை ஈசுவரனாக பாவிக்கவேண்டும். மனத்தில் குருவின் த்யானம், வாக்கால் குரு மஹிமைகளைக் கூறல், சரீரத்தால் குருவின் காரியங்களைச் செய்தல் இவ்விதம் முக்கரணங் களாலும் எப்பொழுதும் பக்தியுடன் குருவை வழிபட வேண்டும். குரு பக்தியால், அவர் உபதேசம் செய்ததோ, செய்யாததோ எல்லாம் மனதில் நன்கு விளங்கும். இவ்வாறு பக்தி, வைராக்யம், நற்குணங்கள் நிறைந்த வனாக சிஷ்யன் சுச்ரூஷையால் குருவின் மனதிற்கு பிரீதியை உண்டுபண்ணி சமயம்பார்த்து மிகுந்த வினயத் துடன் 'நான் யார் ? ஈசுவரன் யார்? பந்தம், மோக்ஷம், ஞானம், அக்ஞானம் இவைகளின் ஸ்வரூபம் யாது? ' என்று கேட்கவேண்டும். அத்விதீயமான அழிவற்ற ப்ரஹ்மத்தை யும், ப்ரஹ்மத்தின் வாசகமாயும் ப்ரஹ்மஸ்வரூபமாயுமுள்ள ஒரே அக்ஷரமான பிரணவத்தையும் உபதேசிக்கும்படி பிரார்த்திக்கவேண்டும். அவரால் உபதேசிக்கப்பட்ட பிரணவத்தை அதன் பொருளான ப்ரஹ்மஸ்வரூபாநு ஸந்தானத்துடன் எப்பொழுதும் ஜபம் செய்துவரவேண்டும். வேதாந்தத்தில் உள்ள மஹாவாக்யத்தால்தான் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் உண்டாகும். ஆகையால் குரு சிஷ்யனுக்கு அதை உபதேசிப்பார். மஹா வாக்யத்தின் அர்த்தத்தை குருவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.' தேசம் காலம், வஸ்து என்ற மூன்றுவித பரிச்சேதங்களும் (எல்லை களும்) அற்றது ப்ரஹ்மம். எல்லா சரீரங்களிலும் விளங்கும் ஜீவனும் இதுவேதான். இது ஒன்றுதான் உண்மைப் பொருள் இதுவே எல்லா மஹாவாக்யங்களின் சுருத்து, எல்லா உபநிஷத்துக்களுக்கும் இதில்தான் தாத்பர்யம் என்பதை குருமுகமாக வேதாந்த விசாரம் செய்து ஸந்தேஹத்திற்கிடமன்னியில் தீர்மானமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். இதைத்தான் 'சிரவணம்' என்பார் கள். சிரவணத்திற்காகத்தான் ஸந்யாஸாசிரமம் ஏற்பட் டிருக்கிறது. இந்த சிரவணத்தால் ஸம்சயபாவனை (உப நிஷத்துக்களின் தாத்பர்யம் என்ன என்பதில் ஸந்தேஹம்) நீங்கிவிடும். எல்லா உபநிஷத்துக்களுக்கும் ஜீவப்ரஹ்மைக் யத்தில் தான் தாத்பர்யம் என்பது உறுதிப்பட்டுவிடும்

वाक्यार्थः सुविचार्यतां श्रुतिशिरःपक्षः समाश्रीयतां दुस्तर्कात्सुविरम्यतां श्रुतिमतस्तर्कोऽनुसंघीयताम् ।
ब्रह्मास्मीति विभाव्यतामहरहर्गर्वः परित्यज्यतां देहेऽहम्मतिरुज्झ्यतां बुधजनैर्वादः परित्यज्यताम् ॥ ३ ॥

ವೇದಾಂತ ವಾಕ್ಯಗಳ ಅರ್ಥವನ್ನು ವಿಚಾರಮಾಡುತ್ತಿರು, ಉಪನಿಷತ್ ಪಕ್ಷವನ್ನೇ ಆಶ್ರಯಿಸು. ಕುತರ್ಕವನ್ನು ಮಾಡಬೇಡ. ವೇದಾಂತ ಸಮ್ಮತವಾದ ತರ್ಕವನ್ನು ಮಾತ್ರ ಆಶ್ರಯಿಸು. ನೀನೇ ಬ್ರಹ್ಮವೆಂದು ತಿಳಿ. “ಅಹಂ ಬ್ರಹ್ಮಾಸ್ಮಿ" ಎಂಬ ಭಾವನೆಯನ್ನು ಸದಾ ಅನುಸಂಧಾನಮಾಡು. ಗರ್ವವನ್ನು ಪರಿತ್ಯಜಿಸು. "ದೇಹವೇ ನಾನೆಂಬ" ಭಾವನೆಯನ್ನು ಬಿಡು. ವಿದ್ವಜ್ಜನರೊಡನೆ ವಿವಾದವನ್ನು ಮಾಡಬೇಡ.

Always ponder over the meaning of the sayings of the Vedanta. Give up vain speculation. Keep in mind reasoning power in order to follow the trend of the Vedantic texts. Meditate daily upon your identity with the Brahman - the Supreme Reality. Give up pride. Renounce the idea that you are the body. Stop all disputation with the wise.

இரண்டாவது சுலோகத்தின் முடிவில் சிரவணத்தைப்பற்றிக் கூறிவிட்டு அதற்கு அடுத்ததான மனன நிதித்யாஸனங்களை மூன்றாவது சுலோகத்தில் விளக்கிக்கூறுகிறார் . குரு முகமாக சிரவணம் செய்தபிறகு குருவின் வாக்யத் திலும், வேதாந்தத்திலும் விசுவாஸம் இருப்பதால் ஸந்தேஹம் நீங்கி உபநிஷத்துக்களின் தாத்பர்யம் ஜீவ ப்ரஹ்மைக்யத்தில் தான் என்பது தீர்மானமாகத் தெரிந்த போதிலும், யுக்திக்கும் அநுபவத்திற்கும் இது ஒத்துவா வில்லையே, பிரத்யக்ஷவிருத்தமாக இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படக்கூடும். இதுதான் அஸம்பாவனை என்பது. இது நீங்குவதற்காக மனனம் செய்யவேண்டும். தகுந்த யுக்திகளைக் கண்டு பிடித்து அதன். மூலம் உபநிஷத் தாத்பர்யம் பொருத்தமானது தான் என்று தீர்மானிப்பது தான் மனனம் என்பது. ஸ்ரீசங்கரபகவத்பாதாசார்யர் தம்முடைய எல்லா பிரகரணங்களிலும் மனனத்திற்காகவே உபநிஷத் ஸித்தாந்தத்திற்கு ஸாதகமாக அநேக யுக்திகளைக் காட்டியிருக்கிறார். உபநிஷத்துக்களிலுள்ள மஹாவாக்யங்களின் அர்த் தத்தை விசாரிக்கவேண்டும். (தத் த்வம் அஸி) என்ற இடத்தில் 'தத்' பதத்திற்குப் பொருள் ஈசுவரன். அவன் ஒருவன், எல்லாம் அறிந்தவன். எல்லா சக்திகளும் உள்ளவன். உலகைப் படைத்துக் காத்து, அழிப்பவன் நமக்குப் புலப்படாதவன். நம்மை ஆள்பவன். 'த்வம்' பதத்திற்குப் பொருள் ஜீவன். அவன் பல. அல்பக்ஞன், சக்தியற்றவன், ப்ரத்யக்ஷமாகத் தோன்றுபவன். 'அ ' பதத்தால் இவ்விருவரும் ஒன்று என்று உபநிஷத் கூறுகிறது. ஒன்றுக்கொன்று விருந்தமான வெவ்வேறு லக்ஷணங்கள் உள்ள இவ்விருவரும் ஒன்று என்று கூறுவது பொருத்தமாக இல்லை. இதனால் பலர் உபதிஷத் கூறுவது தப்பு என்று தீர்மானித்து சுருதிக்கு விருத்தமாகவே ஜீவஸ்வரூபத்தை யும் சுவரஸ்வருபத்தையும் காட்டி இரண்டும் செங்வேறு என்று தீர்மானிக்கிறர்கள். மற்றும் சிலர் மிகுந்த தைர்யத் துடன் ஜீவனும் ஈசுவரனும் வேறுதான் என்ற தங்கள் தத்த்வம் அஸி) நீ அவனைச் சேர்ந்தவனாக இருக்கிறாய். ஜூனல sier (தஸ்மின் த்வம் தத்த்வம் அஸி) நீ அவனிடத்தில் இருக்கிறாய். அளி (அதத் த்வம் அஸி) நீ அவன் இல்லை என்று எல்லாம் பலவிதமாக சுருதியின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்கு ஸாதகமாகப் பல யுக்திகளையும் காட்டுகிறார்கள். இவர்கள் கூறும் யுக்தி களையோ, கொள்கைகளையோ மனதால் நினைக்கவேகூடாது. புத்திக்கு வியாமோஹம் ஏற்பட்டுவிடும். முதலில் உபநிஷத்து கூறுவதையே ஸித்தாந்தமாக தீர்மானித்துக்கொள்ள வேண்டும். பிறகு துஸ்தர்க்கங்களுக்கு இடம் கொடுக்காமல் உபநிஷத் ஸித்தாந்தம் பொருந்தும்படியான யுக்திகளைத் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். அதாவது:- ஜீவஸ்வரூபத்தையும் ஈசுவர ஸ்வரூபத்தையும் நன்கு பரிசோதித்துப் பார்த்தால் கீழ்க்கண்ட உண்மை தெரிய வரும். அக்ஞானத்தை உபாதியாகக் கொண்டவன் ஜீவன். தேஹ பேதத்தால் தான் ஜீவன் வெவ்வேறாகக் காணப்படு கிறான். உண்மையில் ஜீவஸ்வரூபம் ஒன்றே. ஞானக் குறைவு, சக்திக்குறைவு முதலானவை எல்லாம் உபாதியால் ஏற்பட்டவையே தவிற ஜீவஸ்வரூபத்தில் இவை ஒன்றும் கிடையாது. உபாதியை நீக்கிவிட்டால் மிஞ்சுவது சுத்த சைதன்யமே. ஈசுவர ஸ்வரூபத்திலும் ஸர்வக்ஞத்வம் முதலான தர்மங்களெல்லாம் மாயை என்ற உபாதியால் ஏற்பட்டவையே.மாயையை யை நீக்கிவிட்டால் அங்கும் சிஞ்சுவது சுத்த சைதன்றமே. இதைத்தாக்ஷணாளான தால் இரண்டும் ஒன்றே (விதைத்தான் மஹாவாக்யம் காலத்தில் அந்த இடத்தில் (கண்ட) தேவதத்தன் இவன் என்ற வாக்யம் காலமும் தேசமும் வேறுபட்டாலும் கூட தேவதத்த ஸ்வருபம் ஒன்று என்பதை உணர்த்துகிறது. தேவதத்தஸ்வருபத்தில் சேராத காலதேசங்கள் தேவ தத்தனை வேறுபடுத்துவதில்லை. அதுபோல ஜீவஸ்வருபத் திலும் ஈசுவர ஸ்வரூபத்திலும் சேராத உபாதியிலுள் தர்மங்கள் அந்த ஸ்வரூபத்தை வேறுபடுத்த முடியாது. 'தத்'பதமும் 'த்வம்' பதமும் லக்ஷணையால் சுத்த சைதன் யத்தைக் குறிக்கிறது. இது ஒன்று என்பதை அஸிபதம் காட்டு கிறது. ஆகவே மஹாவாக்யார்த்தமான ஜீவப்ரஹ்மைக்யம் பொருத்தமுள்ளதாகவே இருக்கிறது. இதுபோலவே மற்ற மஹாவாக்யங்களின் அர்த்தத்தையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். மண்ணிலிருந்து உண்டாகும் குடம் எப்படி மண்ணைக்காட்டிலும் வேறில்லையோ அதுபோல ப்ரஹ்மத்திலிருந்து உண்டான பிரபஞ்சம் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறல்ல. இம்மாதிரியான பல யுக்திகளைக் கொண்டு உபநிஷத் ஸித்தாந்தமான அத்வைத ப்ரஹ்ம தத்வத்தை மனதில் நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு வேதாந்த சிரவணத்தாலும்,மனனத்தாலும் ஸம்சயபாவனையும், அஸம்பாவனையும் நீங்கியபிறகு வெளி உலகத் தோற்றமாகிய விபரீதபாவனை நீங்க 'நான் ப்ரஹ்ம ஸ்வரூபம்' என்பதை எப்பொழுதும் தியானம் செய்ய வேண்டும். இப்பொழுது ப்ரஹ்மஸாக்ஷாத்காரம் ஏற்பட்டு அக்ஞானம் விலகிவிடும். இனி ஞானிக்கு இயற்கையாக அமைந்துள்ள சில லக்ஷணங்களைக் கூறுகிறார். இவைகளை முமுக்ஷு ஸாதனல் களாக கைக்கொள்ளவேண்டும். ஞானிக்கு தேஹத்தில் கொஞ்சமும் அபிமானம் இருக்காது. சரீரத்தை நான் என ஒருபொழுதும் நினைக்கமாட்டான். சரீராபிமானம் இல்லாததால் ஞானிக்கு கர்வமும் இருக்காது, சரீரத்தை நான் என்று எண்ணுபவன் தான் மற்றவரிடம் இல்லாத சிறப்பு தன்னிடம் இருப்பதைக்கண்டு கர்வம் கொள்வான். ஞானியோ வேற்றுமை உணர்ச்சியில்லாமல் எல்லாவற்றை யும் ப்ரஹ்ம ஸ்வரூபமாகப் பார்ப்பவன். மேலும் ஞானிக்குப் புதிதாக வந்தது ஒன்றுமில்லை. கழுத்தில் உள்ள மாலையை கவனிக்காமல் ஊர்முழுவதும் தேடிக் கடைசியில் நண்பன் வார்த்தையின் மூலம் தெரிந்து கொள்வதுபோல், தான் எப்பொழுதுமே ப்ரஹ்ம ஸ்வரூபமாயிருந்தும் அக்ஞானத் தால் மறைந்திருந்தது, இப்பொழுது குருவின் உபதேசத் தால் தெரிகிறது. இவ்வளவுதான். ஆகவே ஞானிக்குப் புதிதாக ஏற்பட்டது ஒன்றுமில்லாததாலும் கர்வம் ஏற்பட நியாயமில்லை. இவ்வாறு ஸ்வஸ்வரூபத்தை அறிந்து அதிலேயே நிலைத்து நிற்கும் ஞானிக்கு கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதோ, பதில் கூறவேண்டியதோ அடைய வேண்டியதோ ஒன்றும் இல்லாததால் படித்தவர்களுடன் வியவஹாரம் செய்யமாட்டான். வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் எங்கும் ப்ரஹ்மத்தையே காண்பான். முமுக்ஷுவும் குருவினிடம் தத்வத்தை அறிந்துகொள்ள வேண்டும். பிறருடன் வீண் வியவஹாரம் செய்யக்கூடாது.

क्षुद्व्याधिश्च चिकित्स्यतां प्रतिदिनं भिक्षौषधं भुज्यतां स्वाद्वन्नं न तु याच्यतां विधिवशात्प्राप्तेन संतुष्यताम् ।
औदासीन्यमभीप्स्यतां जनकृपानैष्ठुर्यमृत्सृज्यतां शीतोष्णादि विषह्यतां न तु वृथा वाक्यं समुच्चार्यताम् ॥ ४॥

ಹಸಿವೆಂಬ ರೋಗಕ್ಕೆ ಪ್ರತಿದಿನ ಭಿಕ್ಷೆಯೆಂಬ ಔಷಧಿಯಿಂದ ಚಿಕಿತ್ಸೆ ಮಾಡಿಕೋ, ರುಚಿಕರವಾದ ಆಹಾರವನ್ನು ಎಂದಿಗೂ ಬಯಸಬೇಡ, ತಾನಾಗಿಯೇ ದೊರೆತುದರಲ್ಲಿ ತೃಪ್ತಿಹೊಂದು. ಚಳಿ, ಶೆಖೆ ಮುಂತಾದುದನ್ನು ತಡೆದುಕೋ. ವ್ಯ ಥ೯ವಾಗಿ ಒಂದು ಮಾತನ್ನೂ ಆಡಬೇಡ. ಲೋಕವಿಷಯದಲ್ಲಿ ( ವಾರ್ತೆಯಲ್ಲಿ) ಉದಾಸೀನನಾಗಿರು. ಜನರಲ್ಲಿ ದಯೆಯ ಅಥವಾ ನಿಷ್ಟುರತೆಯ ವರ್ತನೆಯನ್ನು ಬಿಡು.

Allay the disease of hunger with the medicine of daily alms. Never hanker after dainty dishes. Be content with whatever chance brings you. Patiently endure the pairs of opposites like heat and cold. Never engage yourself in idle talk. Be indifferent to worldly affairs. Cease taking sides out of pity or contempt.

ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கியுள்ள தத்வஞானிக்கு பிராரப்தம் உள்ளவரை சரீர யாத்திரை நடக்கும் முறை களையும் உலகில் அவன் பழகும் விதத்தையும் பரமஹம்ஸ லக்ஷணங்களையும் கூறுகிறார் . ஞானி சரீரத்தை மறந்து ஸமாதியில் ப்ரஹ்மானத்த அனுபவத்தில் மூழ்கியிருக்கும்பொழுது பசி, தாகம் ஒன்றுமே தெரியாது. ஆனந்தானுபவத்தாலேயே ப்ராணதாரணமும் ஏற்பட்டுவிடும். லோகானுக்ரஹத்திற்காக நம் அதிருஷ்டத் தால் ஸமாதி கலைந்து வெளியில் ஞானி வருவானேயாகில் அப்பொழுது பசி, தாகம் தோன்றலாம். அப்பொழுது அதைத் தணிக்கவும், பிராணதாரணத்திற்காகவும் பிகை எடுத்து உண்பான். பிக்ஷை எடுக்கும்பொழுது பிராரப் கர்மவசத்தால் எது கிடைக்கிறதோ, அதைக்கொண்டே திருப்தி அடைவான். உணவை நாக்குக்கு அடிமையாகி ருசியான வேண்டமாட்டான். பிராணதாரணத்திற்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவுதான் சாப்பிடுவான். மேலும் பசியைப் பிணியாக எண்ணி இந்தப் பிணி நீங்க பீக்ஷான்னத்தை ஒளஷதமாக நினைத்து சாப்பிடுவான். வியாதி வந்தால் மருந்து சாப்பிடுகிறோம். மருந்தின் ருசியைக் கவனிப்பதில்லை. கசப்போ, துவர்ப்போ, உப்போ எதுவாயிருந்தாலும் சாப்பிடுகிறோம். அளவுடன்தான் மருந்தைச் சாப்பிடுகிறோம். அதுபோல் கிடைத்தது ருசியா யிருந்தாலும் இல்லாவிட்டாலும் பசி நீங்கவும், பிராணனை தரிக்கவும் வேண்டிய அளவுதான் சாப்பிடுவான் ருசியான ஆஹாரத்தையோ, அதிக அளவையோ விரும்பமாட்டான். அதற்காக அதிக முயற்சியும் எடுத்துக்கொள்ளமாட்டான். எந்த உணவினாலும் பசி நீங்கும். பிராணனையும் தரிக்க முடியும். பிக்ஷையை சேகரித்து வைத்துக்கொள்ளவும் மாட்டான். இந்த தர்மங்களை எல்லாம் ஸாதகனும் கைக் கொள்ளவேண்டும். பிக்ஷை எடுக்கும் சமயத்தில்தான் கிராமத்திற்குச் செல்லவேண்டும். மற்ற சமயங்களில் தனிமையாக இருக்க வேண்டும். ஒரே இடத்தில் வஸிக்கக் கூடாது. ஒன்றிலும் பற்றுதல்கூடாது. உலகில் நடக்கும் ஒரு காரியத்திலும் தான் ஸம்பந்தப்படாமல் உதாஸீனனாக இருக்க வேண்டும். உலகில் ஒருவனிடம் அன்பினால் இரக்கத்தையோ, மற்றவனிடம் த்வேஷத்தையோ காட்டக் கூடாது. கிருபை ஸத்வகுணகார்யம். க்ரௌர்யம் தமோ குண கார்யம். இவைகளால் ராக த்வேஷங்கள் வளரும். கிருபையினால் பரதருக்கு மான் பிறவி ஏற்பட்டது. க்ரௌர்யத்தால் நஷுஷன் ஸ்வர்க்கத்திலிருந்து விழுந்தான். இரண்டுமே ஞானிக்கு இடைஞ்சல்தான். எங்கும் ஸம த்ருஷ்டி வேண்டும். 'எனக்கு த்வேஷ்யனும் இல்லை. ப்ரியனும் இல்லை' என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஆனாலும் ஞானமார்க்கத்தைக காப்பாற்றவும், ஞானி பரம்பரை உலகில் நீடித்து பிறர் க்ஷேமம் அடையவும், உத்தமாதிகாரியான சிஷ்யன் பிடிவாதமாக தன்னிடம் கெஞ்சி வேண்டிக்கொள்ளும் பக்ஷத்தில் அவனிடம் மட்டும் இரக்கம்காட்டி அவனைக் கைதூக்கிவிட ஞானத்தை உபதேசிக்கவேண்டும். குளிர்-உஷ்ணம், பசி-தாகம், ஸுகம்-துக்கம் இவைகளை ஸஹித்துக்கொள்ளவேணடும். வீண் வார்த்தை பேசக் கூடாது. உபநிஷத் விஷயங்களைத்தவிற மற்ற விஷயங்களில் மௌனத்தைக் கைக்கொள்ளவேணடும். இவைகள் எல்லாம் ஞானியின் லக்ஷணங்கள். முமுக்ஷு இவைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தில் கொண்டுவர வேண்டும்

एकान्ते सुखमास्यतां परतरे चेतः समाधीयतां पूर्णात्मा सुसमीक्ष्यतां जगदिदं तद्भाधितं दृश्यताम् ।
प्राक्कर्म प्रविलाप्यतां चितिबलान्नाप्युत्तरैः श्लिष्यतां प्रारब्धं त्विह भुज्यतामथ परब्रह्मात्मना स्थीयताम् ॥ ५॥

ಏಕಾಂತದಲ್ಲಿ ಸುಖವನ್ನು ಕಾಣು. ಪರಮಾತ್ಮನಲ್ಲಿ ಮನಸ್ಸನ್ನು ನಿಲ್ಲಿಸು. ಪರಿಪೂರ್ಣನಾದ ಆತ್ಮತನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಧ್ಯಾನಿಸು. ಈ ಜಗತ್ತೆಲ್ಲವೂ ಆತ್ಮಜ್ಞಾನದಿಂದ ಬಾಧಿತವಾಗಿದೆಯೆಂದು ತಿಳಿ. ಸಂಚಿತ ಕರ್ಮಗಳನ್ನು ಜ್ಞಾನಾಗ್ನಿ ಯಿಂದ ದಹಿಸು. ಭವಿಷ್ಯತ್ ಕರ್ಮಗಳಿಂದ ಲಿಪ್ತನಾಗಬೇಡ, ಪ್ರಾರಬ್ಧವನ್ನು ಅನುಭವಿಸು. ಆಮೇಲೆ ಪರಬ್ರಹ್ಮಸ್ವರೂಪದಲ್ಲಿ ನೆಲೆನಿಲ್ಲು.

Find happiness in solitude. Fix your mind on the Supreme Self. Meditate on the highest. Visualise the Self and realise how this Universe is sublated thereby. Destroy the effect of all previous Karma by virtue of the realisation of consciousness. Be not tainted by subsequent actions. Endure Karma that has begun to fructify and then attain the state of identity with the Highest Brahman.

இதற்குமேல் ஞானியின் நிலையைக் கூறுகிறார். வெளி ப்ரவிருத்திகளில் ஈடுபட்ட ஜனங்களுடன் சேராமல் தனிமையில் ஆனந்தமாக இருக்கவேண்டும். தனிமையில்தான் ஆனந்தம். அப்பொழுதும் மனமும் இந்திரியங்களும் வெளியில் சென்றுகொண்டிருந்தால் ஆத்மானந்தத்தை அனுபவிக்கமுடியாது. ஆகையால் அவைகளைத் தடுத்து எல்லாவற்றிற்கும் மேலான பரப்ரஹ் மத்தில் மனத்தைச் செலுத்தவேண்டும். தன்னை அந்த ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே தியானம் செய்யவேண்டும். வேறு ஒரு பொருளும் தோன்றக்கூடாது. ஒரு சமயம் அதிலிருந்து மனம் வெளியில் வந்தாலும் அப்பியாஸத்தால் திருப்பித் திருப்பி மனதை அங்கு செலுத்தி அதிலேயே நிலை பெறும்படி செய்யவேண்டும். அப்பொழுது அவன் எங்கும் நிறைந்த ப்ரஹ்மத்தை நேரில் காண்பான். இந்த ப்ரஹ்ம ஞானத்தால் அவனுக்கு ஜகத்தின் உண்மைத் தோற்றம் மறைந்துவிடும். உலக ம் தோன்றினாலும் இப்பொழுது முன்போல பார்க்கமாட்டான். வேடிக்கை யாகப் பார்ப்பான். உண்மை என்ற எண்ணம் நீங்கி பொய் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். உலகத்தில் பழகினாலும் அவன் மனத்தில் ஒரு விகாரத்தையும் உண்டுபண்ணாது. கல்லால் செய்து வர்ணம் தீட்டப்பட்டிருந்த நாயைக்கண்டு உண்மை என்று எண்ணி பயந்து நடுங்கியவன் இது கல் தான் என்று தெரிந்தபிறகு முன்போல் பயப்படுவானா? நாயின் உருவம் தோன்றினாலும் அதைக்கல்லாகப் பார்ப்பது போல், ஞானிக்கு பிரபஞ்சம் தோன்றிடுைம் அதை பிரஸ்டி மாலே பார்ப்பான்: இந்த பொய்த்தோற்றம் ஞானம் வந்தவுடன் நிற்காது பிரசாதம் விலகி விதேஹ முக்கி ஏற்பட்டபின் தான் நீங்கும். மூன்றுவித ஸஞ்சிதம்,ஆகாமி, பிராரப்தம் என கர்ம மாக மந்த்கப்பட்டிருக்கிறது. இதுவனது எல்லாப் பிறன் களிலும் தசம் செய்து தம்மிடம் சேர்ந்துள்ள கர்மாக்கள் களிஞ்ந்தம் எனப்படும். இதுவரை அவைகளின் பலணை சாந்திதம் அவகாசம் ஏற்பட போமையில் பின்னும். அறிபவிகொடுக்கத் தயாராக உள்ள நிலைமையில் நம்மிடம் இவைகளைக் கொஞ்சம் அவை இருஅதுபவித்தே தீரவேண்டுமுழுவதுனம் வந்து அவை இருந்துவருகின்றன. செனம் நீங்கியதும் ஸஞ்சிதகர்மா முழுவதும் அழிந்து விடும். பின்னால் செய்யும் கர்மாவிற்கு 'ஆகாழி' என்று பெயர். ஞானம் வந்தபிறகு அவனுக்கு சரீராபிமானம் 'अहं कर्ता' (काळी मील) न எண்ணம் இல்லாததாலும் முந்தைய பழக்கத்தை ஒட்டி சரீராதிகள் ஏதாவது காரியங்கள் செய்தாலும் அவை இவனிடம் ஒட்டுவதில்லை. பலனையும் கொடுப்பதில்லை ஸஞ்சித கர்மாக்களில் இந்த சரீரத்தைக் கொடுத்து பலனைக் கொடுக்க ஆரம்பித்துள்ள கர்மாவுக்கு 'பிராரப்தம்' என்று பெயர். இது ஞானம் வருவதற்கு முன்னமே பலனைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டபடியால் நடுவில் நிறுத்த முடியாது. ஆகையினால் ஞானியும்கூட பிராரப்த கர்மாவின் பாக்கி பலனை அனுபவித்தேயாகவேண்டும். மாங்கனியை அடிப்பதற்காக மாமரத்தில் எறிந்த கல் கனியை வீழ்த்திய பிறகும் வேகம் உள்ளவரை சென்றுதான் கீழே விழுகிறது குடம் தயாராய்விட்டாலும் வேகம் உள்ளவரை சுழன்ற தான் குயவனின் சக்கரம் நிற்கிறது.இதுபோல் பலனைச் கொடுக்க ஆரம்பித்துவிட்டபடியால் முழுவதும் பலாச் கொடுத்தபிறகுதான் நீங்கும். ஒருவிதத்திலும் விக்கி அனுபவித்துத் தான் தீர்க்கவேண்டும். நாம் என்னசெய்யமுடியும் ' என்று உலகில் சொல்வதில்லையா? வஸிஷ்டர், வாமதேவர் முதலான் ள் கூறுகின் பிராரப்த கமாவை அநுபவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த பிராரப்த கர்மா நுபவத்தால் ஞானி ஒருவித விகாசமும் அடையமாட்டான். உலகம் பொய் என்ற எண்ணம் உறுதிப்பட்டுவிட்டதாலும், சரீராதிகளைக் காட்டிலும் வேறாகத் தன்னைப் பார்ப்பதாலும், பிராரப்த கர்ம பலத்தை சரீராதிகள் அனுபவிக்கும்பொழுது தான் ஸாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஞானம் வந்தபிறகு பிராரப்த கர்மாவினால் உலகில் ஸஞ்சரிக்கும் நிலைதான் 'ஜீவன் முக்தி' என்பது. ஸமீப காலத்தில் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மம் ஜீவன்முக்த நிலையில் ஸஞ்சரித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீ சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகள் ப்ரஹ்மானந்தானுபவத்துடன் ஜீவன்முக்தராக சிருங்ககிரி ஸ்ரீ சாரதா பீடத்தில் விளங்கி இருந்ததை நேரிலும் பார்த்திருக்கிறோம். மேலும் ஞானம் வந்தவுடன் மற்ற கர்மாக்களுடன் பிராரப்தமும் விலகி சரீரம் நீங்கும் பக்ஷத்தில் சிஷ்யனுக்கு உபதேசம் செய்ய श्रीमान शुभारं लंगळा. 'उपदेश्यन्ति ते யா ஏரிய:' (உபதேஷ்யந்தி தே ஞாநம் ஞாநி நஸ்தத்வதர்சிந) என்று ப்ரஹ்மதத்வத்தை நேரில் அறிந்த ஞானிகள் சரீரத்துடன் இருந்து சிஷ்யர்களுக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள் என்று கீதையில் பரமாத்மா கூறுகிறார். பிராரப்த கர்மா நீங்கியபிறகு எங்கும் நிறைந்த அகண்ட ஸச்சிதானந்த பரப்ரஹ்மஸ்வரூபமாக இருப்பான். எப்பொழுதுமே பரப்ரஹ்ம ஸ்வரூபமாயிருந்தாலும் முன்னால் தெரியாமலிருந்தது, இப்பொழுது தெரிந்துவிட்டது. ஞானம் வந்தபிறகும் லோகரீதியாக சரீரம் இருந்தது. இதில் மற்றவர்களுக்குப்போல் ஸ்தூல சரீரம் அழிவதுடன் ஸூக்ஷ்ம சரீரமும் அதனதன் காரணத்தில் லயம் அடைந்து என்பது. செல்லவேண்டிய அழிந்துவிடுகிறது. இதுதான் விதேஹமுக்தி இதை அடைவதற்கு வேறு இடம் தேடிச் தில்லை. தேசகாலங்களுக்கு உட்படாத அகண்டபரிபூர்ண ஸச்சிதானந்த ஸ்வரூபமாக விளங்குகிறான் இவ்விதமாக ஆசார்ய பகவத்பாதர் அடியிலிருந்து படிப் படியாக மேல்நிலையை அடைவதற்கு வேண்டிய உபாயங் களை உபதேசித்தருளினார்.